தமிழ் செய்திகள் |
ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது. உடல் இளைப்பது, எய்ட்ஸ் பாதித்தவர்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது என்றால் அது தண்ணீர் சிகிச்சைதான். தண்ணீர் சிகிச்சை என்றால் ஏதோ புதிய சிகிச்சை முறை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதுதான் தண்ணீர் சிகிச்சையாகும். பலரும் சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பார்கள். அதற்குப் பிறகு தண்ணீர் பக்கமே போக மாட்டார்கள். அப்படியானவர்களது உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று எண்ணிப் பார்த்தால் அவர்களது நெஞ்சே ஒரு நிமிடம் நின்று விடும். தண்ணீர் நம்மை புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. தண்ணீர் குடிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும். நாளொன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். கோடை காலத்தில் இன்னும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளையும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வையுங்கள். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பலரும் தண்ணீர் அதிகமாக அருந்த மாட்டார்கள். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிகளில் கழிவறையை அடிக்கடி பயன்படுத்த முடியாது என்பதுதான். எனவே பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளின் நிலைமையை சொல்லிப் புரிய வையுங்கள். குழந்தைகளுக்கும் போதுமான நீர் கொடுத்தனுப்புங்கள். என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினாலும் குறையாத உடல் எடை, அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் குறைவதைக் கண்கூடாக பார்க்கலாம். உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடித்தால் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடவாழத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிக் கொண்டு கடைசியில் உடலில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுகிறது. எனவே அதிகமாகத் தண்ணீர் குடித்து வருபவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கும்.
2010 சித்திரை மாதம் 27 ந் திகதி சிவபதமடைந்த எங்கள் அருமை அம்மம்மாவின் இறுதி நிகழ்வின் போது பேரப்பிள்ளைகளால் எழுதி வாசிக்கப்பட்டது திரும்பவும் முதலாம் ஆண்டு நினைவாக.. (மேலும் ) இடப்பெயர்வின் பின்னர் வளலாய் வாழ் மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்க்காக பாடுபடும் அமைப்புக்களில் ஒன்று வளலாய் விவசாய சம்மேளனம்.இவ் சம்மேளனம் 350 ற்க்கு மேற்பட்ட வளலாய் வாழ் விவசாய அங்கத்தவர்களை கொண்டு இயங்கிவருகின்றது. இதன் பணிகளை பராட்டி இலங்கை வங்கித்தலைவர் திரு.காமினிவிக்கிரமசிங்காவினால் சம்மேளன நிர்வக உறுப்பினர்கள் கௌரவிக்கபடனர். அந்தவகையில் சம்மேளனத் தலைவர் சண்முகநாதன் ஞானரூபன் செயலாளர் கணபதிபிள்ளை சுந்தரலிங்கம் பொருளாலர் தாமோதரம் நந்தகுமார் ஆகியோர் கௌரவிக்கப்படனர்.இன்னிகள்வு ஆவரங்கால் சிவசக்தி மணிமண்டபத்தில் நடைபெற்றது. இவர்களின் பணி வளலாய் வாழ் விவசாயிகளின் முன்னேற்றத்திற்க்கு முக்கிய பங்கு ஆற்றிவருகின்றமை குறிப்பிடதக்கது இவர்களின் பணி மேம்மேலும் உயர்ந்து வளலாய் வாழ் விவசாயமக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்த வளலாய் மக்கள் சார்பாக நாமும் வாழ்துகின்றோம். வளலாய் மண்ணில் இருந்து N.குமரன்
நாகதம்பிரான் கோவிலின் வரவு செலவு கணக்குகள் பரிபாலன சபையினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால் நீங்கள் பார்வையிடலாம்(மேலும்)
|
வவுனியா செட்டிக்குள(ம்)த்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு கணேஷ் சபாரத்தினம் அவர்கள் 07-01-2012 சனிக்கிழமை அன்று இறைபதமடைந்தார். தகவல் தொடர்புகளுக்கு சந்திரகாந்தம்(Rani)- 0244903099 பெரிய நாகதம்பிரான் கோவிலின் மண்டலாபிஷேக படங்கள்
|
![]() |
இடைக்காட்டினை பிறப்பிடமாகவும் ஓமானில் பொறியியலாளராக
பணிபுரிந்து வந்தவருமாகிய திரு. சிவஞானசுந்தரம் திருநாவுக்கரசு (திரு) அவர்கள் இடைக்காட்டில் 03.01.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் நாராயணபிள்ளை கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும் நாகேஸ்வரியின் கணவருமாவார்.
இவர் தெய்வநாயகி (இலங்கை), கமலாதேவி (இலங்கை), சிறிகாந்தன் (இலங்கை), கருணாநிதி (டென்மார்க்), கிருஸ்ணமூர்த்தி (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரரும், சுவாமிநாதன் (இலங்கை), சிவபாலன் (இலங்கை), பரிமளம் (இலங்கை), ஜெகதீஸ்வரி (டெமார்க்), வளர்மதி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், திலீபனின் மாமனாரும், சுகந்தினியின் சிறிய தந்தையும், கஜிதா, ஜனனி, கோபிகா, சர்மிகா, திவாகர், நிருஜா, நிலோசன், நிரோஜி ஆகியோரின் பெரிய தந்தையும் கீர்த்திகனின் தாத்தாவுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.01.2012 வெள்ளிக்கிழமை அன்று அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாமித்திடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
சுவாமிநாதன் (இலங்கை) - 0094 77 9947405
சிவபாலன் (இலங்கை) - 0094 77 6365916
திலீபன் (இலங்கை) - 0094 77 6064913
கஜிதா (இலங்கை) - 0094 77 7716370
சந்திரன் (டென்மார்க்) - 0045 97 422053 / 0045 31951064
முருகன் (கனடா) - 001 905 201 7363
தகவல் சந்திரன் (சகோதரன்) - டென்மார்க்.
பிறந்தநாள் விழா
திருமணவிழாக்கள்
கலை விழாக்கள்
அறிவித்தல்கள்
© 2008-11 valalai.com, All rights reserved. |